Santhosh Narayanan
Mun sellada - Manithan
முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை!
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை !
ஓகே!!

உளி முத்தம் வைத்ததும்
சிதறும் அப்பாறை துளிகள்
அதற்காக கண்ணீா் சிந்தாது
சிற்பத்தின் விழிகள்

கருமேகம் முட்டிக் கொட்டும்
அத்தண்ணீா் பொறிகள்
அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும்
உன் நெஞ்சின் திாிகள்

முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை!!
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை!!

ஆயிரம் தடைகளை உன் முன்னே
காலம் இன்று குவித்தாலும்
ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து
உன்னை பின்னால் இழுத்தாலும்
முன் செல்லடா ஓகே முன் செல்லடா
முன் செல்லடா யே முன் செல்லடா!
முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை!
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை!

ஓஹோ செல்லடா!!!
முன் செல்லடா முன் செல்லடா!!

தூரம் நின்று யோசித்தால்
குட்டை கூட ஆழம்தான்
நீ உள்ளே சென்று நேசித்தால்
அக்கடலும் உந்தன் தோழன்தான்

விதிமேல் பழியைப் போடாமல்
நீ உன்மேல் பழியைப் போடு
ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும்
உன் வாழ்க்கையின் காரணம் தேடு

முன் செல்லடா முன் செல்லடா
முன் செல்லடா!
முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை!!
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை!!!
முன் செல்லடா ஓஹோ!!
முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை!!
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை!!