எங்க சிந்தனையிலே தீ பறக்குது, திரும்பிய இடம் கொடி பிடிக்குது, பகை எடுத்தவன் படை தொடுத்தவன், பகலவன் இனி வழிவிலகிடு
சினம் கொண்ட சிங்கம் அனுங்குது, காலம் மறக்காத வீர தமிழரின், படை எடுத்ததும் நிலம் அதிருது, எதிர்படை எட்டு அடி தவறுது
நான் நின்னா மலை, நடந்தா படை, கடந்தால் பொறி தட்டும்
நாங்க பறந்தா, இடி விழுந்த, சதி சாவின் நுனி யுத்தம்
ஏய்!! சந்தியில பிடிச்ச பிள்ளையார் எடுத்துவைக்கிறோம் முதல் அடி, சண்டையில தலை எடுக்கிற பரம்பரை நாங்க தனிவழி
சாகாத வரம் எமக்கு, தந்தவனே துணிவிருக்கு, வேலெடுத்து எறிந்தவர்கள், வேங்கை நாங்கள் மறுபிறப்பு
சேர சோழ பாண்டிய பண்டாரவன்னியன் வீர அக்கராயன், அது வழி வந்த எங்கள் அண்ணன் அடுத்த இராவணன்
ஏய் எத்தனை முறை நான் சொல்லுவன் உனக்கு, இரத்தத்தில் ஓடுது இராணுவ துடிப்பு, சத்தியம் தாயகம் வெல்கிற வரைக்கும் நிச்சயம் எங்களின் வேங்கைகள் இருக்கு
வளரி எறி போல் வார்த்தைகள், வகுண்டு வருது பார்த்துக்கொள்
பருவம் அடைந்த வார்த்தைகள், இனி பளபளக்குது பாட்டுக்குள்
கடலே… என் கடலே…. கரிகால எங்க மறைஞ்ச, வனமே… என் வனமே….அவன் தடம் தேடி திரிஞ்ச
குலசாமி ஒருத்தன் இருந்தான், நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடுநேரம் நிசியில் நடந்தால், விளக்காக வீதியில் இருப்பான்
ஆனை சேனை அரவம் புரவி ஆண்ட தமிழர் கூட்டம், குறையாத வேகம் குருதி தாகம் கடந்த காலம் பேசும்
இனி நேரம் காலம்பார்த்து, படை இறங்க போகுது புதுசு, இது பாட்டன் தந்த பூமி, நீ பரிசளிக்கிற நமக்கு
வன்னி காட்டில இரண்டு காலில வரிபுலி நடந்தது தெரியுமா, அந்த நாட்டில வந்து பிறந்தவன் எந்தன் குருதி தாகம் அடங்குமா
குட்டக்குட்ட குனியவில்ல, குள்ளநரி இனத்துக்குள்ள, கோபுரத்தில் இருந்தவங்க, குப்பை நடு வீதியில
ஆனா ஊனா எதிரி, அடங்கா தலைவன் குடும்பி, வானம் வரைக்கும் வாழ்த்தும் வணங்கா ஒருவன் வழுதி
ஆரியப்படை கடந்து வந்தவன் பாண்டியன்நெடுஞ்செழியன், அந்த காவிரிக்கு ஒரு அணை எடுத்தவன் கரிகால்வள சோழன்
அங்கு காக்கை வன்னியன் காட்டி தந்தவன், திராவிடன் பழிதீர்க்க வந்தவன், ஆரியத்துக்கு கொடி பிடித்தவன் திராவிடன் அடிவருடி
இங்கு நீயும் நானும் தமிழன், நடுவிலவேண்டாம் ஒருவன், எந்த காலம் வரைக்கும், இருக்கும் கரிகாலன் கதைகள் நிலைக்கும்
கடலே… என் கடலே…. கரிகால எங்க மறைஞ்ச, வனமே… என் வனமே….அவன் தடம் தேடி திரிஞ்ச
குலசாமி ஒருத்தன் இருந்தான், நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடுநேரம் நிசியில் நடந்தால், விளக்காக வீதியில் இருப்பான்
மானம் கொண்ட நரம்பு துடிக்க புலி உறுமுது உறுமி மேளம், பாட்டன் பூட்டன் ஆண்டா கோட்டை மண்புழுக்கு என்ன வேணும்
வன்னி காட்டு வேங்கை விதைத்த ஒரு தலைவனின் தலைமுறை, நாங்கள் களமிறங்கிய சொந்தங்கள் சந்ததி தமிழினம் என உயிர்பெற
தொட்டா தோட்டா தெறிக்கிற, சத்தம் கேட்டா நடுங்கிற, வெடி முழங்கிற உணர்வெகுறுது, தமிழின மென படை பெருகுது
பெண்கள் ஆயுதம் ஏந்தி ஆண்களை காத்த கதையை பாடு, தனிப்பட்ட மண்ணை பெற்றெடுத்த மாண்ட வீரர் பாரு
அடிமைப் படுத்தப்பட்டவர், படித்து பட்டம் பெற்றவர், படித்த படிப்பு வேலை இன்றி தினமும் பொறுப்பில் செத்தவர்
என் நாவில் இருக்கும் ஈட்டி, வார்த்தைகளை நெருப்பில் தீட்டி, அதிகாலை மரண செய்தி, குறி பார்த்து விட்டன்டா ஏவி
குரங்கு கூட்டம் உதவி செய்து காட்டி கொடுத்தது இராம சேது, வானரம் என்று வடக்கு சொன்ன தெற்கு தமிழா திருப்ப கேளு
வரலாற்றை தான் மாற்றி எழுது, அடையாளத்தை தெளிவா திருத்து, தடம் மாற்றிய எதிரி சொல்லு, மூடி மறைச்சா பறக்கும்பல்லு!
கடலே… என் கடலே…. கரிகால எங்க மறைஞ்ச, வனமே… என் வனமே….அவன் தடம் தேடி திரிஞ்ச
குலசாமி ஒருத்தன் இருந்தான், நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடுநேரம் நிசியில் நடந்தால், விளக்காக வீதியில் இருப்பான்
பாணன் பறையன் கடம்பன் துடியன் குடிகள் ஆதி,ஆரிய பார்ப்பன வந்து புகுந்தான் தமிழ் பாதி பாதி
பறம்பு மலையில் பாரியின்குதிரைகள் புயலென பாய்ந்தன, பரதவர் கடலிலே படகுகள் எதிரிகள் புடை சூழ்ந்தன
தமிழ் இல்லாத குலம், சொல்லாத பலம், முப்பாட்டன் கொடை வித்தாக வரும், காலம் மாறி கடந்த பிறகும் கரிய மேகம் பிறந்தோம்
இது வர்ணாசிரம சாதி, நடைபடிகள் இல்லாத மாடி, அண்ணல் அம்பேத்கர் இதை அன்று உரைத்தார் கலைவடிவங்கள் வாழி
அந்த குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை தமிழர் நிலங்கள், இதில் வாழ்ந்து வளர்ந்து பிறந்து வந்தது தமிழனோட நிலைகள்
ஓ… பார்ப்பனனின் கூட்டத்தில நடு வீட்டுக்குள்ள நாங்கள் மணி அடித்தால், காட்டுக்குள்ள வந்தவரை கொடும்புலி அடித்தது அதை அவிழ்ப்பார்
பருவம் பகையும் நடுங்கும், எதிலும் தமிழன் இயங்கும், இழந்த போரில் எதிரி, என் பாட்டனுக்கு ஒரு பருதி
வெள்ளை வேட்டி அரசியல், இங்கு வேதம் சொல்லும் ஆரியர், மந்தைவெளி சாதிகள் நம்மை பிரிக்க வளர்ந்த வியாதிகள்!
கடலே… என் கடலே…. கரிகால எங்க மறைஞ்ச, வனமே… என் வனமே….அவன் தடம் தேடி திரிஞ்ச
குலசாமி ஒருத்தன் இருந்தான், நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடுநேரம் நிசியில் நடந்தால், விளக்காக வீதியில் இருப்பான்