[Ratty]
கன்னிப் பெண்களின் முத்தச்சத்தம் தொலைபேசிக்குள்ள
காதலன் என்று சொல்லி போனவர்கள்
தூரத்தில
பத்து பதினைந்து வயது தொட்ட பெண்களுக்கு கட்டி அரவணைத்து காதலிக்க ஆண் இருக்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும் சொல்லுக்கும் வேந்தனின் ஒரு குரல்
உள்ளுக்குள் தோண்டி பார்த்தால் எரிமலை குளம்புகள்
நிரந்தரமான நண்பன் எவனும் எனக்கில்லை
நிலையில்லா வாழ்க்கையில் தேவைக்கென தேடும் ஒன்றை
குப்பைக்குள் குண்டுமணி
கூக்குரல் எந்தன் தொனி
வித்தைகள் விடை தேடி தாவுகின்ற விடிவெள்ளி
எட்டி பிடிக்க நினைத்தால் ஏட்டிலே தொட்ட கனி
எகத்தாளம் பேசியவன் எவனுக்கும் நான் கோன்
பாட்டில காவல் தெய்வம்
பாம்பாட்டி கொண்ட நாகம்
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடணும்டா தங்கம்
கொண்டாட கூடம் இல்லை
குண்டர்கள் வஞ்சம் உள்ள
புன்னகை புரிந்து புழுங்குகிறார் உள்ளுக்குள்ள
[Sangeethan]
சுழலும் உலகம் முழுதும் கலக்கம் அலைபாயுது அசைகளாலே
குறைகள் இருந்தும் தடைகள் வளர்ந்து திசை மாற போர்க்குணம் தானே
வளர்ந்தால் நடிகன் விழுந்தால் விகடன் நடந்தாலும் ஊர் அடங்காது
சருகாய் இருந்தான் தணலாய் எரிந்தான் சுழல்காற்று இனி அடங்காது
[Ratty]
நான் கலந்தது கதை
என் கவிவரி நடை
சொல் செறிந்தது வளர்ந்தது தமிழ் தந்த கொடை
என் சிலந்திகள் வலை
சிற்றம்பலத்தான் துணை
என் மலை நதி கடல் தொனி அலறுது அலை
யார்… ?????
பணம் கொண்ட பாடகன் தான் தக்காலத்தில் புகழிலே
பாடிலே நாயகன் நான் கலை மக்கள் மடியிலே சொல்
என் கேள்விக்கு பதில்
நான் படுற குயில்
உன் காதோரம் கவிதை வந்து கூவுவேன்
என் இராகம் வரியில வழியில வளர்ந்தது வன்முறை மெல்ல சொல்ல
கொண்டாடும் மனிதர்கள் மனம் குணம் நிறம் உள்ள
பாலகன் கதைவழி தனிவழி தனிமரம் தனக்கென இடமென வகுத்தான்
காலங்கள் கரைந்தாலும் வந்து கொட்டும் கட்பனை
பாட்டுக்கு பல்லவியை தேடிய பாலகன் நான்
கூடத்தில் கோமாளி குனிந்த தலை நிமிர்ந்தான்
தோப்பில ஒற்றைப்பனை,சேற்றிலே செந்தாமரை சாக்கடை சந்தானம் சமுதாயம் சரி பிழை
[Sangeethan]
சுழலும் உலகம் முழுதும் கலக்கம் அலைபாயுது அசைகளாலே
குறைகள் இருந்தும் தடைகள் வளர்ந்து திசை மாற போர்க்குணம் தானே
வளர்ந்தால் நடிகன் விழுந்தால் விகடன் நடந்தாலும் ஊர் அடங்காது
சருகாய் இருந்தான் தணலாய் எரிந்தான் சுழல்காற்று இனி அடங்காது
ஏன் பெண்மீதும் பொன்மீதும் ஆசை ஓடியது
தோல் ரத்தங்கள் சதைகள் வாசம் வீசியது
உன் எண்ணங்கள் போலத்தான் வழக்கை மாறாது ….வெறி நாய்கள் கூட்டத்துக்குள் வெண்புறா பெண்கள் வஞ்சம் கொண்ட நண்பனுக்கள் பொய் சொன்ன கண்கள்
துள்ளுகின்ற அங்கம் எல்லாம் பெண்ணின் ஆயுதங்கள்
[Mc Sai]
அனைவரும் தெரிஞ்சு கொள்ளுங்க மாற்றம் ஒன்றே மட்டும் மாறாதது, சுவாசிக்கும் காற்றுக்கு பிரிவு இல்லை இருந்தும் ஏற்றத்தாழ்வு, மனித பிறவி பொருளில் இல்லை ஈடுபாடு, நிறத்தில் வேறுபாடு பணத்தில் வேறுபாடு, மனிதநேயம் என்னாதது உள்ள புண்ணானது, எதுநன்மை தீமை அறியாமல் உள்மனம் போராடுது, இருந்து இறந்து நெருப்பில் முடிவாய் அதற்கு அப்புறம் அஸ்தி, செய்தது தீமை அனாலும் நெற்றியில் விபூதி, இரண்டுமே சாம்பல் தான் நிறத்திலும் ஒன்றுதான் இருப்பினும் பார்ப்பவன் கோடி அர்த்தங்கள் பார்க்கலாம் so i say என்ட தம்பி take care if its slow now
வாழ்க்கையின் அர்த்தம் உனக்குள்ளே நீயும் காணலாம்