Ostan Stars
Ennai Vittu Kodukkaathavar
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே -2
நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர் -2
-என்னை விட்டு
நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் -2
-என்னை விட்டு
நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் -2
-என்னை விட்டு
நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் -2
-என்னை விட்டு