Ostan Stars
Supernatural
அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது

கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே

சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு

தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே

இது வரைக்கும் இங்கு
தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே
எங்கள் சந்ததி
தடையெல்லாம் தாண்டி
படியெல்லாம் ஓடி
ஏறு ஏறு மேலே ஏறு

தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே