வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே
வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன்
எந்தன் இயேசு என்னோடு
நானாக நான் வந்தேனே
என்னையே தந்தேனே
தானாக எனக்குள் வந்து
எதேதோ செய்தாரே
1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
வெறுப்பாக யாரும் என்னை
தள்ளிவிட்டாலும்
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே
2 நான் போட்ட திட்டங்களும்
வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி
சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக்
காத்துக் கொண்டீரே