எப்பத்தா திறக்கப்படுவதாக – 4
வானம் திறந்து
தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம்
இன்றே திறக்கணும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 2
1. திறந்த வாசலை
உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே
ஒருவரும் பூட்டக்கூடா
வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே
தாவீதின் திறவுகோலைத்
தோளின்மேல் வைத்து
தாவீதின் திறவுகோலைத்
தோளின்மேல் வைத்து
திறக்கச் செய்பவரே
என் வாசல்கள்
திறக்கச் செய்பவரே
எப்பத்தா திறக்கப்படுவதாக – 2
2. ஆபிரகாமும் சாராளும்
ஈசாக்கைப் பெறவே
கர்ப்பத்தைத் திறக்கலையோ…
அன்னாளின் கண்ணீர்க்கு
சாமுவேல் தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ…
இல்லாதவைகளை
இருப்பவைப்போல
இல்லாதவைகளை
இருப்பவைப்போல
அழைத்துத் தந்தருளும்
என் வாழ்விலே
உருவாக்கித் தந்தருளும்
வானம் திறந்து
தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம்
இன்றே திறக்கணும்
எப்பத்தா திறக்கப்படுவதாக – 4