Shankar Mahadevan
September Madham
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
ஏ பெண்ணே!
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து
ஏன் கண்ணே?
நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும்
ஏன் கண்ணா?
காதல் பார்ப்பது பாதி கண்ணிலே
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்?
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணுறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில்
கிடைப்பதில்லையே நண்பா!
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல்
பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!