Ostan Stars
MUZHUVAL
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
அசத்தனாம் என்மேல்
ஆசத்தி கொண்ட
அசத்துரு உம் போல எவருமில்லை

ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
ஏனோ என்மீது சிலுவை அன்பு

தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்

அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்

நான் என்ன செய்தேன் என்று
கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்