Ostan Stars
Parama Erusalamae
பரம எருசலேமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே

பரம எருசலேமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே

1. எருசலேமே
கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும்
ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை
துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய்
சிறகினில் தஞ்சமானேன்

கனிவான எருசலேமே
கனிவான எருசலேமே

பரம எருசலேமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே

2.விடுதலையே
விடுதலை விடுதலையே
லோகமதின்
மோகத்தில் விடுதலையே

நானேயெனும்
சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில்
வாழ்வதால் விடுதலையே

சுயாதீன எருசலேமே
சுயாதீன எருசலேமே

பரம எருசலேமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே



3. ஜீவ தேவன்
நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச்
சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன்
நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள்
ஆவியில் மருவி நின்றேன்

மேலான எருசலேமே
மேலான எருசலேமே

பரம எருசலேமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே

🛐Amen Hallelujah 🛐
🛐Amen Hallelujah 🛐
🛐Amen Hallelujah 🛐
🛐Amen Hallelujah 🛐