Ostan Stars
Enakkothaasai Varum
எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை
ஏறெடுப்பேன்

எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை
ஏறெடுப்பேன்

1.வானம் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
வானம் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே

எண்ணுக்கடங்கா
நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

எண்ணுக்கடங்கா
நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை
ஏறெடுப்பேன்

2.மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்

மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே

எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை
ஏறெடுப்பேன்

3.என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்

இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
ராப்பகல் உறங்காரே
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
ராப்பகல் உறங்காரே

எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை
ஏறெடுப்பேன்

4. ஒரு தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
ஒரு தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்

போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்

எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை
ஏறெடுப்பேன்

எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை
ஏறெடுப்பேன்