Ostan Stars
Worship melody 5
1.கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஆத்துமாவை தேற்றி
என்னை நீதியின் பாதையில்
நடத்துவார்

எதிரி முன் விருந்தொன்றை
ஆயத்தம் செய்தீர்
புது எண்ணெய் அபிஷேகம்
என் மேல் ஊற்றி
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடப்பினும்-2
பொல்லாப்புக்கு பயப்படேனே
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்

கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்களண்டையில்
என்னை கொண்டு போகிறார்
ஜீவனுள்ள நாளும்
நன்மையும் கிருபையும்
தொடருமே
2.யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர்

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும்
பதில் தருவீரே

ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம்
உயர்த்தினீரே

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே – 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை

என் பாதை எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது
மாறுவாழ்வு இல்லை என்றாலும்

நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே

உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

3.ஆதாரம் நீர் தான் ஐயா
என்துரையே
ஆதாரம் நீர் தான் ஐயா

சூதாம் உலகில் நான்
தீதால் மயங்கையில்

நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு –

கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றா கிருபை நதியே ,என்பதியே
வற்றா கிருபை நதியே ; என்பதியே –
சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு

4.இவ்வளவு நேசித்தால் போதாது
உண்மை இவ்வளவும்
ஆராதித்தால் போதாது

எனக்கு உள்ளதை விட
என் ஜீவனை விட
உன்னை நேசிப்பதே
என் ஆசை

இயேசுவே பாத்திரரே
இயேசுவே பாத்திரரே

என் வியாகுலங்கள்
தீர்த்ததாலே அல்ல
என் தேவைகளை
நிறைவேற்றின தாலோ அல்ல

எனக்காய் மரித்த தினால்
நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே

என் திரிகைகளோ
செய்கைகளோ அல்ல
என் காணிக்கைகள்
பொருத்தங்கள் அல்ல

கிருபையாலே மீற்றதினல்
நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே