Ostan Stars
Worship melody 6
1.கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை – கர்த்தர்
என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே – கர்த்தர்
2.என் ஜீவன் நீர் தானே
என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
என் பாவங்கள் பாராமல்
உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல்
கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே
நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
3.இயேசு என் பக்கத்தில்
நேசர் என் பக்கத்தில்
நாளை குறித்த கவலை இல்லை
எதை குறித்த பயமும் இல்லை
என்னோடிருப்பேன் என்று
சொன்ன தேவன் அவர்
என்னை கைவிடாமல் இம்மட்டும்
காக்கும் தேவன் அவர்
இம்மானுவேல் என் பக்கத்தில்
எபினேசர் என் பக்கத்தில்
தனிமை என் வாழ்வில் இல்லை
குறைவும் என் வாழ்வில் இல்லை
எனனை அழைத்த தேவன்
என்றும் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்றும் தேவன் அவர்
உன்னதர் என் பக்கத்தில்
உத்தமர் என் பக்கத்தில்
தோல்வி எனக்கு இல்லையே
ஏமாற்றம் என்றும் இல்லையே
அவர் தழும்புகளாலே என்னை
குணமாக்குகின்றவர்
என் கால்களை அவர் கரங்களினால்
தாங்கும் தேவன் அவர்
எல்ஷடாய் என் பக்கத்தில்
எல் ரோயீ என் பக்கத்தில்
கண்கள் கலங்குவது இல்லை
என் இதயம் கலங்குவது இல்லை
இரட்சகர் என் பக்கத்தில்
கன்மலை என் பக்கத்தில்
பரிசுத்தர் என் பக்கத்தில்
பரிகாரி என் பக்கத்தில்
துருகம் என் பக்கத்தில்
கேடகம் என் பக்கத்தில்
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்
4.இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
பேர் சொல்லி என்னை அழைத்தீர்
மறுபிறவி எனக்கு தந்தீர்
இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்
செங்கடலை பிளந்தென்னை
நடக்க வைத்தீரே
பயம் இனி எனக்கில்லையே
பார்வோனின் சேனையையும்
எதிர்த்து நிற்பேனே
நானோ உந்தன் பிள்ளை – 2
நானோ உந்தன் பிள்ளை – 2
உம் இரத்தம் தந்து மீட்டீரே
உம் ஆவியால் நிறைத்தீரே
உம் பிள்ளை என்று அழைத்தீரே
உம் மார்போடு என்னை அணைத்தீரே
உம்மோடு சேரவே உம்மோடு வாழவே – 2
மீட்டுக்கொண்டீரே மீட்டுக்கொண்டீரே