A.R. Rahman
Tango Kelaayo
கேளாயோ கேளாயோ செம்பூவே…… கேளாயோ
மன்றாடும் என் உள்ளம் வாராயோ……

உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்
உயிர் வாழா அன்றில் பறவை
நான் அன்றில் பறவை……

நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும்
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்

ஓ… நீ என்னை மறந்தால் காற்று கதறும்
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்

ஓ… நீ என்னை பிரியாய்
ஓ…… நீ என்னை மறவாய்
விட்டுப்போனால் வெட்டிப்போகும்
விண்மீனெல்லாம் கொட்டிப்போகும் (கேளாயோ)

என் குறைகள் ஏதுக்கண்டாய்
பேசுவது காதலோ……
பேணுவது காமமோ……
பிரியமென்னப் போலியோ
ஏன் பெண்ணே இடைவெளி……
எதனா…ல் பிரிந்தா…ய்
பிரிந்தா…ய் எதனா…ல்
மறந்தாய் மறந்தாய் (கேளாயோ)