Unakke Nizhalaanen
வானம் புயலாக நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில் நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே என்னை தூக்குதே
நிழலாழத்தில் நீ பிம்பம் பூசிட, உனக்கே நிழலானேன்
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில் நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே என்னை தூக்குதே
நிழலாழத்தில் நீ பிம்பம் பூசிட, உனக்கே நிழலானேன்
எனக்கு நீ, உனக்கு நான் உடனே சொல்லத் தோணுதே
தினம்-தினம் பருவமே பிசிறி பின்னே போகுதே
இதுவரை எதுவுமே இப்படி தாக்கவில்லையே
உன்னால் மிணுக்குறேனே, மிதக்குறேனே
தடுக்கும் நொடியிலுன் குரல் பக்கம் சாய்கிறேன்
கதைக்கும் மொழியாலுள்ள உள்ள வண்ணம் பார்க்கிறேன்
என்னை நான் யாரிடத்திலும் தந்ததில்லையே
ஆனால் ஏனோ உன்னிடம் என்னை ஒப்படைக்கிறேன்