Yuvanshankar Raja
Yelelu Thalamuraikkum
உளு ……..உளு

ஏழேழு தலை
முறைக்கும் எங்க சாமி
பக்க பலம் எடுத்து
வந்தோம் நல்ல வரம்

ஏழுசுவரம்
எங்களுக்கு எப்போதுமே
கூட வரும் எங்க புரம்
பண்ண புரம்

{ முல்லையாறு
முதல் முதலா முத்தமிடும்
அந்த இடம் எல்லைகள
தாண்டி வந்தா எங்க
அப்பன் பொறந்த இடம் } (2)

ஏழேழு தலை
முறைக்கும் எங்க சாமி
பக்க பலம் எடுத்து
வந்தோம் நல்ல வரம்

………………………..

வீரபாண்டி
மாரியம்மா எங்கும்
உள்ள காளியம்மா
தாய் சில காரியம்மா
தந்தா மங்களம்மா
பாட்டி சின்ன
தாயி தந்த பாசமுள்ள
பாவலரு கொட்டி
எடுத்துத்தந்த பாட்டு
பொங்குதம்மா

பட்டிக்காட்ட
விட்டுபுட்டு பட்டணத்தில்
குடிபுகுந்து மேட்டுகளை
கட்டிதந்த மொத்த சொத்தும்
எங்களுக்கு

ஆத்தி என்ன
சொல்ல அன்புக்கும்
பண்புக்கும் அளவு
எங்கிருக்கு

அப்பருந்து
இப்பவரை எங்களுக்கு
என்ன குறை எப்பொழுதும்
மக்களுக்கு சொல்வோம்
நன்றிகள

பெண் : ஏழேழு தலை
முறைக்கும் எங்க சாமி
பக்க பலம் எடுத்து
வந்தோம் நல்ல வரம்
பெண் : ஏழுசுவரம்
எங்களுக்கு எப்போதுமே
கூட வரும் எங்க புரம்
பண்ண புரம்

அல்லி ஊரலுல
நெல்ல போட்டு அழுத்தி
அழுத்தி குத்துங்கடி
அத்தான் வர்றத பாத்துகிட்டு
அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நம்ம நெல்லு குத்துகிற
அழக கண்டு மச்சான் நேருல
வர்றத பாருங்கடி மச்சான்
நேருல வர்றத கண்டா மனம்
துள்ளுகிறத பாருங்கடி உளு

மேற்கு மலை
சாரலிலே மேஞ்சு வந்த
மேக மெல்லாம் போட்டு
தந்த பாட்டு சத்தம்
எப்போதும் கேக்கும்

நாத்தெடுத்து
நடவு நட்டு நம்ம சனம்
பாடுனது ஊரறிய கேட்கும்
போது உற்சாகம் கேக்கும்
அப்பனோட
அறிவுருக்கு அன்னையோட
அரவணைப்பு சத்தியமா
நிச்சயமா அஸ்திவாரம்
எங்களுக்கு

தாயின் அன்பிருக்கு
அது கொடுக்குது மகிழ்ச்சி
உங்களுக்கு வயலுல விளைஞ்ச
நெல்லு நகர தேடி வந்து
பசிகளை தீர்ப்பது போல்
பாரு எங்க கதை

ஏழேழு தலை
முறைக்கும் எங்க சாமி
பக்க பலம் எடுத்து
வந்தோம் நல்ல வரம்

ஏழுசுவரம்
எங்களுக்கு எப்போதுமே
கூட வரும் எங்க புரம்
பண்ண புரம்

{ முல்லையாறு
முதல் முதலா முத்தமிடும்
அந்த இடம் எல்லைகள
தாண்டி வந்தா எங்க
அப்பன் பொறந்த இடம் } (2)

ஏழேழு தலை
முறைக்கும் எங்க சாமி
பக்க பலம் எடுத்து
வந்தோம் நல்ல வரம்

ஏழுசுவரம்
எங்களுக்கு எப்போதுமே
கூட வரும் எங்க புரம்
பண்ண புரம்